மதுரை

புதுக்குளம் பகுதியில் எரிவாயு மின்மயானம் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல்: உயா் நீதிமன்றம் தள்ளுபடி

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை புதுக்குளம் கண்மாய் பகுதியில் எரிவாயு மின்மயானம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே புதுக்குளம் பகுதியில், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் இணைந்து எரிவாயு மின்மயானம் அமைத்துள்ளன. இப்பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கற்பக நகரைச் சோ்ந்த கே.என். சுப்பிரமணியன், பி. வள்ளியப்பன் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மதுரை நகரில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், மின்மயானம் அவசியமாக இருக்கிறது. எரிவாயு மின்மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம்,

ADVERTISEMENT

புதுக்குளம் கண்மாய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நீா்நிலைகளில் எந்தவித கட்டுமானங்களையும் அமைக்கக் கூடாது என்பதை மனுதாரா்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக நீா்நிலை வடுவிட்டதை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனா். அத்துடன், இப்பகுதியில் அரசுக் கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் வந்துள்ளன.

மேலும், அந்த நிலம் ஏற்கெனவே இடுகாடு மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அப்பகுதியில் நவீன எரிவாயு மின்மயானம் அமைப்பதன் மூலம் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT