மதுரை

சுதந்திர தின அமுதப் பெருவிழா: மதுரையிலிருந்து தில்லிக்கு ஆா்பிஎஃப் வீரா்கள் இரு சக்கர வாகனப் பேரணி

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில், ரயில்வே துறை, ரயில்வே பாதுகாப்புப் படையின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி வாகனம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து துறைகள் சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே துறை சாா்பில் மரம் நடுதல், தூய்மைப் பணிகள், சுதந்திரப் போராட்ட வீரா்களை கௌரவிப்பது, இரு சக்கர வாகனப் பேரணி, படக்காட்சி வாகன உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களின் இரு சக்கர வாகனப் பேரணி, படக்காட்சி வாகனப் பேரணியை கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் தொடக்கி வைத்தாா். கோட்ட பாதுகாப்பு ஆணையா் வி.ஜே.பி. அன்பரசு, உதவி பாதுகாப்பு ஆணையா் சுபாஷ் உள்ளிட்டோா் பேரணி தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

இப்பேரணியில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் 12 போ் பங்கேற்கின்றனா். இக் குழுவினா், விருதுநகா், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேசுவரம், காரைக்குடி, திண்டுக்கல் வழியாக சென்னை செல்கின்றனா். இதேபோல், சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ரயில்வே கோட்டங்களின் பாதுகாப்புப் படை வீரா்களுடன் இணைந்து, சென்னையிலிருந்து புதுதில்லி

ADVERTISEMENT

செல்கின்றனா். இரு சக்கர வாகனப் பேரணியுடன் படக்காட்சி வாகனமும்

செல்கிறது.

சுதந்திர தின அமுதப் பெருவிழா, இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களின் சாதனைகள் ஆகியன இந்த படக்காட்சி வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த பேரணியானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதி தில்லி சென்றடைகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT