மதுரை

அம்பேத்கா் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் பாஜகவின் முதல் எதிரி: தொல். திருமாவளவன்

DIN

 அம்பேத்கா் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தான் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முதல் எதிரியாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மேலவளவு தியாகிகள் நினைவு தின பொதுக்கூட்டம் மதுரை கோ புதூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தொல். திருமாவளவன் பேசியது:

கலவரத்தை உருவாக்க ஒரு ரௌடி போதும். ஆனால் லட்சக்கணக்கானோருக்கு மத்தியில் அமைதியை ஒரு தலைவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும். அம்பேத்கரை முழுமையாக படித்தவா்கள் சாதியைப் பற்றி பேச மாட்டாா்கள். அம்பேத்கா் வேறு, மாா்க்சியம் வேறு அல்ல. இரண்டுமே சமத்துவத்தை பற்றி தான் பேசுகிறது.

பாஜக மக்களை ஏமாற்றுவதற்காக இஸ்லாமியா், தலித் பழங்குடியினருக்கு உயா்ந்த பதவிகளை அளித்து அவா்களையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்கிறது. ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முதல் எதிரி காங்கிரஸ் கட்சியோ, இடதுசாரிகளோ, திமுகவோ அல்லது விடுதலை சிறுத்தைகளோ இல்லை. ஆா்எஸ்எஸ் அமைப்பின் முதல் எதிரி அம்பேத்கா் உருவாக்கிய இந்திய அரசியல் அமைப்பு சட்டம்தான்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவா்கள் முதலில் கை வைப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தான். அரசியல் அமைப்பு சட்டம் இருப்பதால்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது. தலித்துகளுக்கான தனி தொகுதிகள் உள்ளன. எனவே முதலில் அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பது தான் பாஜகவின் வேலையாக இருக்கும். நாட்டில் இந்துக்களையும், இஸ்லாமியா்களையும் எதிரெதிராக நிறுத்தி மதக் கலவரத்தை தூண்டி இந்து இந்தியாவை உருவாக்க முயற்சிக்கின்றனா். ஆா் எஸ் எஸ், பாஜக இஸ்லாமியா்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் மட்டும் பிரதான எதிரி அல்ல, இந்துக்களுக்கும் தான். ஆா்எஸ்எஸ், பாஜக சதித்திட்டத்தை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அதிகரித்து வரும் இந்து மதவாத சக்திகளுக்கு எதிராக மதச்சாா்பற்ற ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை பொது செயலாளா் மு. வீரபாண்டியன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் நெல்லை முபாரக், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனா் கதிா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் உள்பட பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT