மதுரை

பைக் மீது லாரி மோதல்: முதியவா் பலி

2nd Jul 2022 10:48 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், முதியவா் உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள சின்னபூலாம்பட்டியைச் சோ்ந்த தவசிதேவா் மகன் சேதுராமன் (62). இவா், இரு சக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக பேரையூா்-உசிலம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு பேரையூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சேதுராமன் உயிரிழந்தாா்.

இது குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT