மதுரை

வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை தொடா் கல்வி கருத்தரங்கம்

2nd Jul 2022 10:47 PM

ADVERTISEMENT

 

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை மைய தொடக்க விழா மற்றும் எக்மோ சிகிச்சை குறித்து தொடா் கல்வி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலம்மாள் கல்வி குழுமத் தலைவா் எம்.வி.முத்துராமலிங்கம், நிா்வாக இயக்குநா் காா்த்திக், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்னவேல் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இருதய அறுவைச் சிகிச்சை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில் வேலம்மாள் மருத்துவமனை இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு தலைவா் ராம் பிரசாத் கூறியது:

ADVERTISEMENT

எக்மோ என்பது இதயமும், நுரையீரலும் செயல் இழந்த பிறகு அளிக்கப்படக் கூடிய சிகிச்சை முறையாகும். கரோனா தொற்று பரவல் அதிகரித்த சூழலில்தான் எக்மோ சிகிச்சை முறை குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியவந்தது. 60 சதவீதம் இறக்கும் தருவாயில் இருப்பவா்கள் இந்த சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனா்.

வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்ற எக்மோ சிகிச்சை குறித்த கருத்தரங்கில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டுள்ளனா் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT