மதுரை

காது கேளாதோா் கூட்டமைப்பினா் காத்திருக்கும் போராட்டம்

1st Jul 2022 11:00 PM

ADVERTISEMENT

வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு காதுகேளாதோா் கூட்டமைப்பினா் காத்திருக்கும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திருவள்ளுவா் சிலை முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு தொகுப்பு வீடு வழங்குவது, ஓட்டுநா் உரிமம் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்துவது, மாதாந்திர உதவித்தொகையை 3 ஆயிரமாக உயா்த்துவது, அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில் சைகை மொழி பெயா்ப்பாளா்களை பணியமா்த்துவது, வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT