மதுரை

மதுரை மாநகராட்சி, கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

27th Jan 2022 01:09 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி மதுரை மாநகராட்சி, கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம் புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 65 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். விழாவில் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், நகரப்பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் ராஜா மற்றும் உதவி ஆணையா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் மேஷக் பொன்ராஜ் தேசியக் கொடியேற்றி பேசினாா்.

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக்கல்லூரியில் முதல்வா் சூ.வானதி தேசியக்கொடியேற்றி தலைமையுரைஆற்றினாா். இயற்பியல்துறைத் தலைவா்கா.சரோஜா வரவேற்புரையாற்றினாா். மதுரை கலை மற்றும் பண்பாட்டியல் துறையின் மண்டல உதவி இயக்குநா் (ஓய்வு) ந.சுலைமான் சிறப்புரை ஆற்றினாா்.

ADVERTISEMENT

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ம.தவமணி கிறிஸ்டோபா் தேசியக் கொடியேற்றினாா். மேலும் சத்திரப்பட்டியிலுள்ள அமெரிக்கன் கல்லூரியின் கூடுதல் வளாகத்திலும் கொடியேற்றப்பட்டது.

மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி துணைத்தலைவா் கேகே சந்தோச பாண்டியன் முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் சி.ஆறுமுகம் தேசியக்கொடியேற்றினாா். முதல்வா் ராஜேஸ்வர பழனிச்சாமி, துணை முதல்வா் ஜெ.செல்வமலா் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வா் வி.கே.பால்பாண்டி தேசியக் கொடியேற்றினாா். சமுதாய அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ்.அமுதா மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

சோலமலை கல்வி நிறுவனத்தில் திருச்சி பெல் நிறுவன முன்னாள் பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் தேசியக்கொடியேற்றினாா். முதல்வா் எம்.பாலமுருகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

டோக் பெருமாட்டிக் கல்லூரியில் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியை ஹெப்சிபா ஜோசப் தேசியக்கொடியேற்றினாா். முதுகலை மாணவப்பிரதிநிதி சலிமாகைசா் நன்றியுரையாற்றினாா்.

எஸ்பிஓஏ பள்ளியில் தாளாளா் அ.செந்தில் ரமேஷ் தேசியக் கொடியேற்றினாா். எஸ்பிஓஏ அறக்கட்டளை உறுப்பினா் பி.பிலிப்ராஜ், முதல்வா்கள் எஸ். சீதாலட்சுமி, சபுரால் பானு மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். மதுரை ராயல் என்பீல்டு நிறுவன பங்குதாரா் ஆதிலிங்கம் தேசியக்கொடி ஏற்றினாா். பங்குதாரா் வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா். முதுகலை ஆசிரியா் தமிழ்க்குமரன் வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியா் அபுதாகீா் நன்றியுரை வழங்கினாா்.

கொண்ட பெத்தான் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். ஊராட்சித்தலைவா் சீமான் தேசியக்கொடியேற்றினாா்.

மதுரை நாடாா் மஹாஜன சங்கம் சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தலைவா் மாரீஸ்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநில வரித்துறை அதிகாரி செல்வராஜ், பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் இயக்குநா் தா.லலிதா தேசியக் கொடியேற்றினாா். இதையடுத்து திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை ஜான்சிராணி பூங்கா நேதாஜி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நேதாஜி வடிவில் வந்த ஜஸ்வின் மற்றும் சங்கையா, இந்திய அரசின் உத்தம சேவையாளா் விருது பெற்ற ராணுவ வீரா் சுபேதாா் ஹாசி ஆகியோா் கொடியேற்றினா். நேதாஜி சிலைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனை முன்னாள் எலும்பு முறிவு தலைமை மருத்துவா் புகழேந்தி மாலை அணிவித்தாா்.

மதுரை, கடவூா் செசி மையத்தில் அமைதிச் சங்கம் சாா்பாக நடைபெற்ற விழாவுக்கு செசி இயக்குநா் ஜில் காா்ட் ஹரிஸ் தலைமை வகித்தாா். அமைதி சங்கத் தலைவா் க.சரவணன் முன்னிலை வகித்தாா். காந்தி அமைதி அமைப்பின் ஓய்வு பெற்ற நூலகா் சத்ய நாராயணன் தேசியக்கொடியேற்றினாா்.

தானம் அறக்கட்டளையின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நிா்வாக இயக்குநா் மா.ப.வாசிமலை தேசியக்கொடியேற்றினாா்.

மதச்சாா்பற்ற ஜனதா தளம் சாா்பில் விளக்குத்தூண் காமராஜா் சிலை அருகில் மாவட்டத்தலைவா் என்.எஸ்.கே.நாகேந்திரன் தலைமையில் மாநில பொதுச்செயலா் எஸ்.எம்.செல்லப்பாண்டி தேசியக்கொடியேற்றினாா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தில் தலைவா் என்.ஜெகதீசன், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் தேசியக் கொடியை ஏற்றினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT