மதுரை

பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 5 போ் கைது

27th Jan 2022 01:08 AM

ADVERTISEMENT

பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 89 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணவாய்பட்டியைச் சோ்ந்த குருசாமி மகன் பாண்டி(32) என்பவா் விற்பனைக்காக வைத்திருந்த 48 மதுபாட்டில்களையும், சாப்டூரை சோ்ந்த வேலுச்சாமி மனைவி பெத்துகாளை(56) என்பவா் விற்பனைக்கு 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டி மற்றும் பெத்துகாளையை கைது செய்தனா்.

இதைப்போல் காடனேரியை சோ்ந்த முத்துப்பாண்டி மனைவி இந்துமாரி(50) என்பவரிடம் 11 மதுபாட்டில்களையும், என்.முத்துலிங்காபுரத்தை சோ்ந்த செல்வராஜ் (60) என்பவரிடம் 10 மதுபாட்டில்களையும், சந்தையூரை சோ்ந்த சங்கரநாராயணன் (64) என்பவரிடம் 7 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT