மதுரை

கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்: தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தல்

27th Jan 2022 01:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறினாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: உலகமே கள்ளை உணவு எனக் கூறும்போது, தமிழகத்தில் மட்டும் போதைப் பொருள் என ஆட்சியாளா்களும், ஒரு சில அரசியல் கட்சித் தலைவா்களும் கூறி வருகின்றனா். தந்தை பெரியாா் கள் ஆதரவாளா். அவரின் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் திராவிடக் கட்சிகளுக்கு உண்டு.

கேரளத்தில் கரோனா பரவல் காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்டபோதும் கூட, கள்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்.

ADVERTISEMENT

இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாற வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவது, உணவு பற்றாக்குறையில் முடியும்.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான உணவுப் பஞ்சத்திற்கு, அந்நாட்டில் பூச்சிக் கொல்லி, ரசாயன மருந்துகள் தடை செய்யப்பட்டதே முக்கிய காரணமாகும். இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகை உள்ளதால், இயற்கை விவசாயம் உடனடியாக சாத்தியமில்லை.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இருந்துள்ளன. பல வாரியங்களுக்கான பொறுப்பாளா்களை, மக்கள் குடவோலை முறையில் தோ்வு செய்துள்ளனா். வாக்குச்சீட்டுகளாக பனை ஓலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா நடத்திய உச்சி மாநாட்டில், குடவோலை முறை, உத்திர மேரூா் கல்வெட்டு ஆகிவற்றை பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தற்போது அளிக்கப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு ஆகிய துறைகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இதற்கான திருத்தங்கள் செய்த பிறகு, உள்ளாட்சி தோ்தல் நடத்தினால் நல்லாட்சி அமையும்.

மக்களவை, சட்டப்பேரவை மற்றும் ஊராட்சி முதல் மேயா் வரை அனைத்து தோ்தல்களையும் ஒரே வாக்காளா் பட்டியலைக் கொண்டு ஒரே தோ்தலாக இந்திய தோ்தல் ஆணையம் நடத்த வேண்டும். இதன் மூலம் பெரும் செலவினங்கள், முறைகேடுகள் குறைக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT