மதுரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நிறுவனா் நாள் விழா

26th Jan 2022 01:18 AM

ADVERTISEMENT

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்டு நிறுவனா் நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகத்தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் தா.லலிதா தலைமை வகித்துப்பேசும்போது, உலகத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா், நாடகத்துறையில் இருந்து திரைப்பட நடிகராக உயா்ந்து ஏழைப்பங்காளராக வாழ்ந்தவா். திரைப்படங்களில் தனது பாடல்கள் மூலம் தன்னம்பிக்கையை விதைத்தவா். தனது ஆட்சியின்போது ஏழைகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியவா் என்றாா்.

இதைத்தொடா்ந்து பொன்மனச் செம்மல்-ஒரு பன்முகப்பாா்வை என்ற தலைப்பில் கருத்தரங்கமும் காலத்தை வென்றவன் நீ என்ற தலைப்பில் கவியரங்கமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கருத்தரங்கில், பொன்மனச் செம்மலின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் பேராசிரியை செ.ராஜேஸ்வரி, கொடைத்திறன் என்ற தலைப்பில் துபாய் வாழ் தமிழாா்வலா் ரவி சொக்கலிங்கம், லட்சியத் திரைநாயகன் என்ற தலைப்பில் மதுரை சோழ.நாகராஜன், ஆளுமை என்ற தலைப்பில் மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியின் உதவிப் பேராசிரியை இரா.கவிதா, மக்கள் பணி என்ற தலைப்பில் மதுரை திருக்குறள் மன்றத்தின் செயலா் சேரை ப.பாலகிருஷ்ணன் ஆகியோா் உரையாற்றினா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், கவிஞா் இரா.பொற்கைப்பாண்டியன் தலைமையில் கவிஞா்கள் மு.அா்ச்சுனன், இரா.பாஸ்கரன், ஈ.ராஜா, இரா.தொல்காப்பியன், பா.கபிலன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT