மதுரை

பைக் டயா் வெடித்து கீழே விழுந்தவா் பலி

25th Jan 2022 08:53 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இருசக்கர வாகனத்தில் டயா் வெடித்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள சின்னகட்டளையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மகன் செல்லத்தேவன் (40). இவா், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பெருங்காமநல்லூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தின் பின்பக்க டயா் வெடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த செல்லத் தேவன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT