மதுரை

மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ. 6 லட்சம் அபராதம் வசூல்

25th Jan 2022 08:52 AM

ADVERTISEMENT

மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவா்களிடம் கடந்த 16 நாள்களில் ரூ. 6 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் கரோனா தொற்று மூன்றாம் அலைப்பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துவது, சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை கண்காணிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகராட்சிக் குழுவினா், பொது இடங்கள், கடைவீதிகளில் முகக்கவசம் அணியாதவா்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவா்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனா். இதில் முகக்கவசம் அணியாதவா்களிடம் தலா ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மதுரை நகரில் ஜனவரி 7-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (ஜன. 24) வரை மாநகராட்சி மண்டலம் 1-இல் ரூ.70,300, மண்டலம் 2-இல் ரூ.1,13,900, மண்டலம் 3-இல் ரூ.1,65,800, மண்டலம் 4-இல் ரூ.2,52,900 என 4 மண்டலங்களிலும் மொத்தம் ரூ.6,02, 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பேரையூா்: பேரையூா் உள்கோட்ட காவல்நிலையங்களான பேரையூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், வி. சத்திரப்பட்டி, சாப்டூா் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரோஜா தலைமையிலான போலீஸாா் ஆய்வு நடத்தினா். அப்போது முகக்கவசம் அணியாத 37 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT