மதுரை

மனைவி, மாமியாரை தாக்கியவா் கைது

25th Jan 2022 08:58 AM

ADVERTISEMENT

மேலூா் அருகே மதுபோதையில் மனைவி, மாமியாரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்தவா் சேதுபதி (32). இவரது மனைவி சிங்குபாண்டி (25) . இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கணவா் சேதுபதி மதுபோதையில் அடித்து துன்புறுத்தியதால், சிங்குபாண்டி தனது தாயாா் பாப்பா வீட்டுக்குச் சென்று அங்கு வசித்துவந்தாா். இதனிடையே, மதுகுடித்து விட்டு, பாப்பா வீட்டுக்கு வந்த சேதுபதி, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் சிங்குபாண்டி காயமடைந்தாா். அப்போது தடுக்க முயன்ற மாமியாா் பாப்பாவையும் சேதுபதி கட்டையால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள், இருவரையும் மேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தகவலறிந்த கீழவளவு போலீஸாா், சேதுபதியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT