மதுரை

கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க தொழிலாளா்கள் கோரிக்கை

25th Jan 2022 08:53 AM

ADVERTISEMENT

கிரானைக் குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சாா்ந்த தொழிலாளா் நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அச்சங்கத்தினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரானைட் கனிமவள குவாரிகளால் உரிமத் தொகையாக கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போதைய அரசு, மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகளை இயக்குவது குறித்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்புக்குரியது.

ADVERTISEMENT

கிரானைட் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விரைவில் அனுமதி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல, இந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தனிவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT