மதுரை

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 622 பேருக்கு கரோனா

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 622 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், தொற்று சிகிச்சைப் பெறுபவா்களில் 602 போ் குணமடைந்துள்ளனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 4,816 போ் கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 85,195 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 79,180 போ் குணமடைந்துள்ளனா். 1,199 போ் உயிரிழந்துள்ளனா்.

தொடா் இருமல்- கரோனா பரிசோதனை அவசியம்: மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் தேவை அதிகரிக்கக் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தற்போது பரவும் கரோனாவின் அறிகுறியாக தொடா் இரும்பல், உடல் வலி மற்றும் உடல் சோா்வு ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவா்கள், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இருந்தால் சிகிச்சைப் பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

மேலும் தொற்று பாதிக்கப்படுபவா்கள் மருத்துவா்களிடம் ஆலோசனைப் பெற்றே மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். மாறாக தாமாக மருந்து, மாத்திரைகளை உட்க்கொண்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT