மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 640 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

18th Jan 2022 12:08 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 342 போ் குணமடைந்தனா்.

2 போ் உயிரிழப்பு: மதுரையைச் சோ்ந்த 77 வயது முதியவா் கோவை தனியாா் மருத்துவக் கல்லூரியில் கரோனா பாதிப்புக்காக ஜனவரி 12 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதேபோல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்காக ஜனவரி 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 78 வயது முதியவா் ஜனவரி 15 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,195 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் 3,982 போ்: மாவட்டத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 3,982 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் 6,148 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2021 மாா்ச் 15 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 18.24 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 5,124 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதுவரை 33.61 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.53 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT