மதுரை

இரண்டாவது முறை முழு ஊரடங்கு அமல்: சாலைகள் வெறிச்சோடின

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 2 ஆவது முறையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று மூன்றாம் அலைப்பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பால், மருந்துக் கடைகள், உணவகங்கள் பெட்ரோல் பங்குகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க், உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முக்கியச் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் சாலைத்தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மேலும் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை நிறுத்தி காரணம் என்ன என்பதைக் கேட்டறிந்த பின்னரே அனுமதித்தனா். அத்யாவசியத் தேவையின்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரக் காவல்துறை எல்லைகள், மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜனநடமாட்டம், வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT