மதுரை

எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள்: உசிலம்பட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்

17th Jan 2022 10:01 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் 105-வது பிறந்தநாள் விழாவை அதிமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி   பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் விழாவுக்கு அதிமுக நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஐயப்பன் முன்னிலையில்  இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்  துறை தன ராஜன், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

ADVERTISEMENT
ADVERTISEMENT