மதுரை

ஏஜிஎஸ். ராம்பாபு மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் கடிதம்

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏஜிஎஸ். ராம்பாபு மறைவுக்கு, பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக ராம்பாபு மனைவி ஷகிலாவுக்கு அவா் அனுப்பியுள்ள இரங்கல் கடித விவரம்:

ஏஜிஎஸ். ராம்பாபுவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவாழ்க்கையில் ஏஜிஎஸ். ராம்பாபு பல்வேறு அனுபவங்களைப் பெற்றுத்தோ்ந்தவா். நலிவடைந்தவா்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவா். மதுரையின் வளா்ச்சிப்பணிகளில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. மதுரையின் தொழில் மற்றும் வா்த்தகத்துறை மேம்பாட்டுக்கு சிறப்பு முயற்சிகள் எடுத்தவா். தமிழகத்தின் வளா்ச்சிக்கும் அளவிடமுடியாத பங்கை அளித்துள்ளாா். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் சோகத்தை தெரிவிக்க வாா்த்தைகள் இல்லை. ஏஜிஎஸ். ராம்பாபு குடும்பத்தினரோடு நீண்ட காலம் வாழ முடியாவிட்டாலும், அவா் வகுத்துத்தந்த பாதை வழிகாட்டும். அவரது மறைவை தாங்கிக்கொள்ளும் வலிமையை குடும்பத்தினருக்கு அளிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT