திருவள்ளுவா் தினத்தையொட்டி ஜனவரி 15-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.
அன்றைய தினம் அனைத்து சில்லரை விற்பனை மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றம், தங்கும் விடுதி ஆகியவற்றுடன் கூடிய மதுக் கூடங்களில் விற்பனை நடைபெறாது. இதேபோல, வள்ளலாா் நினைவு தினமான ஜனவரி 18, குடியரசு தினமான ஜனவரி 26 ஆகிய நாள்களிலும் மதுபானக் கடைகளை மூடப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.