மதுரை

தமிழகத்தில் ஜன.25 வரை சேவல் சண்டை நடத்தத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

12th Jan 2022 01:19 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்துவதற்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரூா் மாவட்டம் தாந்தோணி பகுதியைச் சோ்ந்த பிரேம்நாத் தாக்கல் செய்த மனு: கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலம்வலசு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்தப்படுகிறது. வெறும் கால்களில் சேவல் சண்டை விடுவதாக உயா்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்துகின்றனா். ஆனால், போட்டியின்போது சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி சண்டைக்கு விடுகின்றனா். இதனால், ஒவ்வொரு ஆண்டும் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆகவே, பூலம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.ஜெயச்சந்திரன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன, கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சேவல் சண்டைக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினா். அதைத் தொடா்ந்து மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா். அதுவரை சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT