மதுரை

சோலைமலையில் தைப்பூசத் திருவிழா: காமதேனு வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்

12th Jan 2022 01:15 AM

ADVERTISEMENT

சோலைமலை முருகன் கோயிலில் தைபூசத் திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேதரராக சுப்பிரமணியசுவாமி காமதேனு வாகனத்தில் செவ்வாய்க்கிழமை எழுந்தருளினாா்.

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலையில் தைபூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி சுப்பிரமணியா் வாகனப் புறப்பாடு பக்தா்கள் அனுமதியின்றி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை வள்ளி, தெய்வானை சமேதரராக சுப்பிரமணியசுவாமி காமதேனு வாகனத்தில் எழுந்தருளினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT