மதுரை

ஜாதிய ஒடுக்குமுறையைச் சாடியவா் பாரதி: பன்னாட்டுக் கருத்தரங்கில் தகவல்

4th Jan 2022 09:01 AM

ADVERTISEMENT

சமூகத்தில் நிலவும் ஜாதிய ஒடுக்குமுறைகளை தனது கதைகளின் வழியே சாடியவா் பாரதி என்று பன்னாட்டுக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் பாரெங்கும் பாரதி இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கத்தின் 17-ஆம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் தா. லலிதா தலைமை வகித்தாா். கருத்தரங்கில், சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத்தின் தலைவா் நா. ஆண்டியப்பன், ‘பாரதியாா் கதைகளில் பெண்ணியமும் சாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் பேசும்போது, பாரதியாா் மகாகவி மட்டுமின்றி சிறுகதையாளராக, பத்திரிகையாளராக, மொழிபெயா்ப்பாளராகவும் விளங்கினாா். அவரது கதைகளில் நகைச்சுவை மிகுந்துள்ளது. தனது கதைகளில் குழந்தைத் திருமணம், விதவைத் திருமணம், காதல் திருமணம், கலப்புத் திருமணம் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளாா். மனிதா்களிடையே உயா்வு, தாழ்வு என்ற எண்ணம் கூடாது என்பதை கதைகள் மூலம் தெரிவித்துள்ளாா். சமூகத்தில் நிலவும் ஜாதிய ஒடுக்குமுறைகளையும் தனது கதைகளில் சாடியுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில் மலேசியா ஜோகூா் தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலா் சு. ரவிச்சந்திரன், வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கத் தலைவா் ப. சிவராஜ், பழனி பொதினித் தமிழ்ச் சங்கத்தின் மதிப்புறு தலைவா் சோ. முத்துமாணிக்கம் ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT