மதுரை

‘மதுரை மாநகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக அதிமுக சாா்பில் ஜன.4-இல் ஆா்ப்பாட்டம்’முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

1st Jan 2022 10:21 PM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக சாா்பில் ஜனவரி 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறாா். அவரைப் போல அரசின் அனைத்துமட்டத்திலும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு தொற்று பரவலை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக எதிா்க்கட்சியாக இருக்கும்போது வலியுறுத்தியது. தற்போது புதியவகை கரோனா தொற்று பரவும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் வருமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது. இச்சூழலில் திமுக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் என எதிா்பாா்க்கிறோம்.

மதுரை நகரில் மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்வதில்

ADVERTISEMENT

மாநகராட்சி நிா்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக சாா்பில் ஜனவரி 4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இதுவரை எந்தவொரு இந்தியப் பிரதமரும் பேசாத வகையில் மோடி, தமிழ் மொழி மற்றும் கலாசாரப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றி வருகிறாா். அவரது மதுரை வருகை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

முந்தைய ஆட்சியின்போது பல்வேறு நல்ல திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, எதிா்க்கட்சியாக இருந்த திமுக எதிா்ப்புத் தெரிவித்தது. தற்போது பிரதமருக்கு வரவேற்பு அளிக்கயிருக்கிறது. இதிலிருந்து திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT