மதுரையில் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மதுரை தேவாலயங்களில் இரவு 11.30 மணிக்கு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. மதுரை கோ.புதூரில் உள்ள தூய லூா்தன்னை தேவாலயம், நரிமேடு கதீட்ரல் தேவாலயம், கீழவெளி வீதி தூய மரியன்னை தேவாலயம், மேலவெளி வீதி சிஎஸ்ஐ தேவாலயம், டவுன்ஹால் சாலை புனித ஜெபமாலை அன்னை தேவாலயம், பழங்காநத்தம் புனித அந்தோனியாா் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு சிறப்பு பிராா்த்தனைகள் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றன.
இதில், கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். மேலும், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.