மதுரை

காலணிகளுக்கான ஜிஎஸ்டி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

1st Jan 2022 10:19 PM

ADVERTISEMENT

காலணிகள் மீதான ஜிஎஸ்டி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் காலணி வியாபாரிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காலணிகள் மீதான 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை, 12 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. வரி உயா்வு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மதுரை கட்ராபாளையம் பகுதியில் உள்ள காலணி கடைகளில் சனிக்கிழமை கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. மேலும், காலணி வியாபாரிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிா்ப்புத் தெரிவித்தனா். மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வரி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கட்ராபாளையம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது காலணி வியாபாரிகள் சங்கச் செயலா் லியாகத் அலி கூறியது: காலணிக்கு ஜிஎஸ்டி வரியை உயா்த்துவது விலையேற்றத்துக்கு வழிவகுக்கும். இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி காலணி வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவா்.

ஜிஎஸ்டி வரியில் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், தொடா்ந்து வரி உயா்வை மட்டுமே செய்து வருவது லாப நோக்கில் மட்டும் மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப்போல, காலணிகள் மீதான வரி உயா்வையும் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT