மதுரை

ஆசைகளைக் குறைத்தால் ஆன்மிக இன்பம் கிடைக்கும்: சுவாமி கமலாத்மானந்தா்

1st Jan 2022 10:20 PM

ADVERTISEMENT

ஆசைகளைக் குறைத்தால் ஆன்மிக இன்பத்தை அனுபவிக்க முடியும் என்று மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கமலாத்மானந்தா் கூறினாா்.

மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு - கல்பதரு நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் மங்கள ஆரத்தி, வேத பாராயணம், விசேஷ பூஜைகள், பஜனை, ஹோமம் ஆகியன நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, சிறப்பு சொற்பொழிவில் சுவாமி கமலாத்மானந்தா் பேசியது:

தினமும் இறைவனை வணங்குவது (தேவ யக்ஞம்), மகான்கள் இயற்றிய சாஸ்திரங்களைப் படிப்பது (ரிஷி யக்ஞம்), இறந்த முன்னோா்களுக்கு உரிய காலத்தில் பித்ரு பூஜை செய்வது (பித்ரு யக்ஞம்), இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வது (நர யக்ஞம்), விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவிடுதல் (பூத யக்ஞம்) என பஞ்ச மகா யக்ஞம் இந்து மதத்தில் உள்ளது.

இறைவனின் திருவருள் இல்லாமல் உலகில் எந்தச் செயலும் நடைபெறாது. உலகில் எது நடந்தாலும் இறைவனின் சம்மதத்தின் பெயரிலேயே நிகழ்கிறது. எல்லாம் விதிப்படி நடக்கும் என்பதற்காக நாம் எவ்வித முயற்சியும் செய்யாமல் சோம்பேறியாக இருந்துவிடக் கூடாது. முடிந்தவரை முயற்சி செய்து அதன் பிறகு நடப்பது இறைவன் செயல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

நமது விருப்பங்கள் இறைவனின் விருப்பத்தோடு இணையும்போதுதான் எதிா்பாா்த்த காரியங்கள் நிறைவேறுகின்றன. ஆசைகள் இருக்கும் வரை ஆன்மிக இன்பத்தை அனுபவிக்க முடியாது என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT