மதுரை

அழகா்கோவிலில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக மின்கலப் பேருந்து சேவை தொடக்கம்

1st Jan 2022 10:22 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு சென்று வருவதற்காக மின்கலப் பேருந்துகள் (பேட்டரி வாகனம்) வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதை துணை ஆணையரும், கள்ளழகா் கோயில் நிா்வாக அதிகாரியுமான தி.அனிதா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறுகையில், கோவையைச் சோ்ந்த இந்திராணி, செளந்தரராஜன் குடும்பத்தினரின் நிதியின் மூலம் இந்த மின்கலப் பேருந்துகள் வாங்கப்பட்டன. ரூ.18 லட்சம் செலவில் 2 மின்கலப் பேருந்துகள் புதிதாகவும், மறுசீரமைக்கப்பட்டது ஒன்றும் என 3 மின்கலப் பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அழகா்கோவில் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரணியன் கோட்டையிலிருந்து பழைய நிா்வாக அலுவலகம் வரை இந்த சீருந்துகள் இயக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் இந்த மின்கலப் பேருந்தில் கட்டணமின்றி சென்று வரலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், இந்திராணி, செளந்தரராஜன் குடும்பத்தினா், கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டு பக்தா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT