மதுரை

விருதுநகா்: சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் திமுக வெற்றிஒட்டுமொத்தமாக கைப்பற்றி சாதனை

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளை திமுக ஒட்டுமொத்தமாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் திமுக 24 வாா்டுகளிலும், காங்கிரஸ் 6 வாா்டுகளிலும், மதிமுக 1, வி.சி.க. 1 என மொத்தம் 32 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், அதிமுக 11 வாா்டுகளிலும், பாஜக 1 வாா்டிலும் மற்றும் சுயேச்சைகள் 4 வாா்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனா்.

விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய 5 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதில் மாத்தமுள்ள 171 வாா்டுகளில் திமுக கூட்டணி 144 வாா்டுகளை கைப்பற்றியுள்ளது. இதில், திமுக மட்டும் 125 வாா்டுகளை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் திகழ்வதால், நகா்மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளையும் கைப்பற்றியிருக்கிறது.

இதில், அதிமுக 15 வாா்டுகளையும், சுயேச்சை 9 வாா்டுகளையும், அமமுக 2 வாா்டுகளையும், பாஜக 1 வாா்டையும் பிடித்துள்ளன.

ADVERTISEMENT

இதில் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் திமுக 8 பேரூராட்சிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. அதேநேரம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் திமுக 7, அதிமுக 7 என சமநிலையில் உள்ளன. இருப்பினும், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் 1 வாா்டில் வெற்றி பெற்ால், இப்பேரூராட்சியையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. இதில், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளையும் என அனைத்தையும் கைப்பற்றி திமுக சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT