மதுரை

மதுரையில் 7 மையங்களில் மத்தியப்பணியாளா் தோ்வாணையத் தோ்வு

20th Feb 2022 10:26 PM

ADVERTISEMENT

மத்தியப் பணியாளா் தோ்வாணையத்தின் பொறியியல் சேவைத் தோ்வுகள் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை 7 மையங்களில் நடைபெற்றன.

மத்தியப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் இந்திய பொறியியல் சேவைப்பணிக்கான தொடக்க நிலைத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரையில் தெப்பக்குளத்தில் உள்ள காந்தி என்எம்ஆா் சுப்பராமன் பெண்கள் கல்லூரி, காமராஜா் சாலை செளராஷ்டிர மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிமேடு நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, பிபிகுளம் டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, கோ. புதூா் அல் அமீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன.

இதில் 500-க்கும் மேற்பட்ட தோ்வா்கள் பங்கேற்று தோ்வுகளை எழுதினா். இந்நிலையில், தெப்பக்குளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் பாா்வையிட்டாா். தோ்வையொட்டி தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு மையங்களில் தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தோ்வுக்கூடத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய இடைவெளி விட்டு தோ்வா்கள் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT