மதுரை

மேம்பாலப் பணிகள்: தல்லாகுளம், அழகா்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: பறக்கும் மேம்பாலப்பணிகள் காரணமாக மதுரை தல்லாகுளம், அழகா் கோவில் சாலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை மாநகரப்போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை நகரில் பறக்கும் பாலம் கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை(பிப். 20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பறக்கும் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை அழகா்கோவில் சாலை, நவநீதகிருஷ்ணன் கோவில் வீதி சந்திப்பு முதல் அவுட் போஸ்ட் வரை இருவழிப்பாதை சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம் கோகலே சாலை வழியாக ஐயா்பங்களா, புது நத்தம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றங்கள் எதுவுமின்றி அதே வழித்தடத்தில் வழக்கம் போல் செல்ல வேண்டும். பிடிஆா் சிலை சந்திப்பில் இருந்து பாண்டியன் ஹோட்டல் சந்திப்புக்குச் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. பி.பி.குளம் சந்திப்பு, வடமலையான் மருத்துவமனை பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள் பிடிஆா் சிலை வழியாக பாண்டியன் ஹோட்டல் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் எஸ். பி. பங்களா சந்திப்பு, தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.

அழகா்கோவில் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே சாலை வழியாக வந்து கோகலேசாலை- நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தல்லாகுளம் பெருமாள் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகா் கோவில் சாலை, அம்பேத்காா் சிலை சந்திப்பு வழித்தடமாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து நேராக அழகா் கோவில் சாலைப் பகுதிக்கு செல்லவேண்டும். மேலூா் சாலை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கோகலே சாலை வழியாக வந்து கோகலே சாலை - நவநீதகிருஷ்ணன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தல்லாகுளம் பெருமாள் கோயில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அழகா் கோவில் சாலை, அம்பேத்கா் சிலை சந்திப்பு வழித்தடமாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் வழியாக கக்கன் சிலை வந்தடைந்து மேலூா் சாலை பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல அழகா்கோவில் சாலையிலிருந்து தாமரைத்தொட்டி சந்திப்பை கடந்து தல்லாகுளம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வந்து அங்கிருந்து இடதுபுறமாக யூத் ஹாஸ்டல், கக்கன்

சிலை சந்திப்பினில் வலதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக அவுட்போஸ்ட் சந்திப்பு வழியாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்லவேண்டும். மேலூா் சாலையிலிருந்து அழகா்கோவில் சாலைக்கு தற்சமயம் கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியாா் சிலை வந்தடைந்து வலது புறமாக திரும்பி பாரதியாா் பூங்கா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வழியாக அழகா் கோவில் சாலை செல்ல வேண்டும். மேலூா் சாலையிலிருந்து நத்தம் சாலைக்கு தற்சமயம் கக்கன் சிலை, யூத் ஹாஸ்டல் வழியாக சென்று வரும் போக்குவரத்து தடைசெயயப்பட்டு அனைத்து வாகனங்களும் கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை வழியாக பெரியாா் சிலை வந்தடைந்து வலதுபுறமாக திரும்பி பாரதியாா் பூங்கா வழியாக பிடிஆா் சிலை சந்திப்பு வழியாக நத்தம் சாலை செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT