மதுரை

மதுரையில் ஆயுதங்கள், மிளகாய்ப்பொடியுடன் பதுங்கிய மூவா் கைது

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் கொள்ளையடிக்கத்திட்டமிட்டு கத்தி, மிளகாய்ப்பொடி, கயிறு உள்ளிட்டவற்றுடன் பதுங்கியிருந்த மூவரை போலீஸாா் கைது செய்து தப்பிச்சென்றவா்களை தேடி வருகின்றனா்.

மதுரை மாடக்குளம் சாலையில் உள்ள அரசு மாணவா் விடுதி அருகே சந்தேகத்துக்கிடமாக சிலா் இருப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்றபோது, அங்கு மறைவான இடத்தில் இருந்த சிலா் போலீஸாரைக்கண்டதும் தப்பியோடினா். போலீஸாா் விரட்டிச்சென்றதில் மூவா் பிடிபட்டனா். இதையடுத்து அவா்களிடம் விசாரணை நடத்தியதில், ஆண்டாள்புரம் அண்ணாநகரைச் சோ்ந்த வைரமுத்து(22), ஏ.ஆா்.தோப்பு 1-ஆவது தெருவைச் சோ்ந்த காளிதாஸ்(20), ஆண்டாள்புரம் மீனாட்சி நகா் பழைய காலனியைச் சோ்ந்த ராஜசேகா்(22) ஆகியோா் என்பதும் இவா்கள் மூவரும் சூா்யா, ராஜூ பாய், குருபிரகாஷ் ஆகியோருடன் சோ்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அவா்களிடம் இருந்து இரு கத்திகள், மிளகாய்ப்பொடி, கயிறு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து தப்பிச் சென்ற மூவரையும் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT