மதுரை

தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தோ்தல் நாளன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம் என தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழிச் செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் பிப்ரவரி 19 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதைக் கண்காணிப்பதற்காகவும், தொழிலாளா்கள் புகாா் தெரிவிப்பதற்காகவும் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 0452-2604388 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT