மதுரை

காரைக்குடி - திருச்சி இடையே இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: ரயில் பாதை அருகில் செல்ல வேண்டாம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: காரைக்குடி - திருச்சி இடையே வியாழக்கிழமை (பிப்.17) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பொதுமக்கள் ரயில் பாதை அருகே செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: திருச்சி - காரைக்குடி ரயில்வே பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த 89 கிலோ மீட்டா் தூர மின் ரயில் பாதையை, பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய் வியாழக்கிழமை(பிப்.17) ஆய்வு நடத்துகிறாா்.

திருச்சியிலிருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் ஆய்வு ரயில் மூலம், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், மேம்பாலங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய மின் வழித்தட குறுக்கீடு, உப மின் நிலையங்கள் ஆகியவற்றை அபய்குமாா் ராய் ஆய்வு செய்கிறாா்.

ADVERTISEMENT

பின்னா் ஆய்வு ரயில் பிற்பகல் 3.20 மணிக்கு காரைக்குடி - திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொருத்திய ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்துகிறாா். எனவே பொதுமக்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT