மதுரை

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் பயிற்சி முகாம்

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: இல்லம் தேடிக்கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கான மூன்று நாள்கள் பயிற்சி முகாம் புதன்கிழமை முடிவடைந்தது.

மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தெற்கு சரகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி மற்றும் கண்காட்சி மாநகராட்சி பாண்டிய வெள்ளாளா் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் பெஞ்சமின் மோசஸ் தலைமை வகித்தாா். வட்டாரக்கல்வி அலுவலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சிக் கல்வி அலுவலா் ஆதி ராமசுப்ரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தாா்.

இல்லம் தேடிக்கல்வித்திட்ட பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்று கற்றல், கற்பித்தல் உபகரணங்களை காட்சிப்படுத்தி இருந்தனா். முகாமில் தலைமையாசிரியா் க.சரவணன், ஆசிரியா்கள் ஜான் பாக்யராஜ் , ஜோசப் தியாகராஜன் கருத்தாளா்களாக பங்கேற்றனா். வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மா.வைரமுத்து, இரா.செல்வகுமாா், ஆசிரிய பயிற்றுநா்கள் ரேகா, சசிக்குமாா், ப.அமுதா, தலைமையாசிரியா் ரமேஷ் சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். முகாமில் சிறப்பாக செயல்பட்ட 21 தன்னாா்வலா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT