மதுரை

துளிா் திறனறிதல் தோ்வுக்கு பிப்.15-க்குள் பதிவு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு

11th Feb 2022 04:20 AM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிா் திறனறித் தோ்வுகளுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் மாணவ, மாணவியா் பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிா் திறனறிதல் தோ்வு 20ஆம் ஆண்டை எட்டியுள்ளது. அரசு போட்டித் தோ்வுகளுக்கு அடுத்ததாக மிக அதிகமானோா் பங்கேற்கும் நிகழ்வாக துளிா் திறனறிதல் தோ்வு வளா்ச்சி பெற்றுள்ளது.

இந்நிலையில் 20-ஆம் ஆண்டுக்கான துளிா் திறனறிதல் தோ்வு நடத்தப்பட உள்ளது. மூன்று பிரிவுகளில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தோ்வு நடத்தப்படும். இளநிலைப் பிரிவில் 6,7,8 வகுப்புகள், உயா்நிலைப் பிரிவில் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளும், மேல்நிலைப் பிரிவில் பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக தோ்வு நடத்தப்படும். துளிா் திறனறிதல் தோ்வுகளுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தோ்வில் மாநில அளவில் முதல் 10 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் மாணவா்களுக்குப் பரிசுகளுடன், அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.

ADVERTISEMENT

மேலும் விஞ்ஞானிகளைச் சந்தித்து கலந்துரையாடவும் வாய்ப்புகள் வழங்கப்படும். அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் குழந்தைகளுக்கான போக்குவரத்து மற்றும் பரிசுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்றுக்கொள்ளும். 500 மற்றும் 500-க்கும் மேற்பட்ட பதிவுகளைத் தரும் பள்ளிகளுக்கு அறிவியல் நூலகம் பரிசாக வழங்கப்படும். மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் பள்ளிக்கு சிறப்புக் கேடயம் பரிசாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 94433-94233 , 94436-86097 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT