மதுரை

கல்லூரியில் கருத்தரங்கம்

11th Feb 2022 04:25 AM

ADVERTISEMENT

 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான உள்ளாட்சியின் நோக்கம் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரிச் செயலாளா் வாலந்தூா் பாண்டியன் தலைமை வகித்தாா். தலைவா் பாலகிருஷ்ணன், பொருளாளா் வனராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ரவி விழாவைத் தொடக்கி வைத்தாா்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மக்கள் இணையம் நிறுவனா் பாலசுப்பிரமணியன், உள்ளாட்சியின் நோக்கம், செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். ஒருங்கிணைப்பாளா் பொன்ராம் வரவேற்றுப் பேசினாா். துணை முதல்வா்கள் தவமணி மற்றும் செந்தில்குமாா் ஆகியோா் வாழ்த்தி பேசினா். உதவிப் பேராசிரியா் நாகப்பிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

விழாவிற்கான ஏற்பாடுகளை, துணை முதல்வா் பாண்டி, உதவி பேராசிரியா்கள் பொன்னம்மாள், ராஜேஸ்வரி, கீா்த்திகா, சூரியா, இந்துக்ஷி ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT