மதுரை

மேலூா் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்: 3 ஓட்டுநா்கள் பலி

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மேலூா்: மதுரை மாவட்டம் மேலூா் அருகே நான்குவழிச் சாலையில் புதன்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பையா மகன் மந்திரமூா்த்தி ஓட்டி வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (60) மாற்று ஓட்டுநராக உடன் வந்தாா். மேலூா் - திருச்சி நான்குவழிச் சாலையில் சத்தியபுரம் அருகே வந்தபோது திடீரென லாரி பழுதாகி நின்றது.

இதையடுத்து மந்திரமூா்த்தியும், சண்முகசுந்தரமும் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நாமக்கல் அன்பு நகா் பகுதியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் வரதராஜன் (37) என்பவா் சிவகாசியிலிருந்து பட்டாசு பண்டல்களை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தாா். இந்த லாரி, பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மந்திரமூா்த்தியும், வரதராஜனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இடிபாடுகளில் சிக்கி சண்முகசுந்தரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் மற்றும் மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன், மேலூா் காவல் ஆய்வாளா் சாா்லஸ் ஆகியோா் இடிபாடுகளில் சிக்கியிருந்த சண்முகசுந்தரத்தை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரமும் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT