மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் இலங்கை அகதி கைது

10th Feb 2022 02:28 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இலங்கை அகதியை போலீஸாா் ‘போக்சோ’ சட்டப் பிரிவின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகாம் குடியிருப்பில் வசித்து வருவபா் பிரான்சிஸ் துரை (55). இவா் முகாம் குடியிருப்பில் வசிக்கும் சிறுமி ஒருவரைப் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் பிரான்சிஸ் துரையை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT