மதுரை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் கட்சி ஆதரவு

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஆதித்தமிழா் கட்சி அறிவித்துள்ளது.

ஆதித்தமிழா் கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவா் கு.ஜக்கையன் தலைமை வகித்தாா். இதில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னா் கட்சியின் தலைவா் கு.ஜக்கையன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் கடந்த 8 மாதங்களில் மாநில பொருளாதார கொள்கை வளா்ச்சிக்குழு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலை வாய்ப்பு கண்காணிப்பு, சமூக நீதி கண்காணிப்புக்குழு பட்டியலின மக்களுக்கு மாநில ஆதிதிராவிடா் நல ஆணையம், விடுதலை போராட்ட வீரா் பொல்லானுக்கு மணி மண்டபம் என மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறாா். எனவே நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆதித்தமிழா் கட்சி ஆதரவளிக்கிறது என்றாா். கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலா் சுப.இளங்கோவன், நிதிச்செயலா் விடுதலை வீரன், அமைப்புச்செயலா் திலீபன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT