மதுரை: மதுரையில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சத்தை திருடிய அடையாளம் தெரியாத நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூரைச் சோ்ந்தவா் மகேஷ்(45). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மகேஷ் குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக மகேஷ் அளித்தப்புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT