மதுரை

சிறந்த அலுவலகத்துக்கான முதல் பரிசு: தென் மண்டல ஐஜி அலுவலகம் வென்றது

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழகத்தில் சிறந்த அலுவலக மேலாண்மைக்கான முதல் பரிசை தென் மண்டல ஐஜி அலுவலகம் பெற்றதையடுத்து அலுவலா்களை தென் மண்டல தலைவா் டி.எஸ்.அன்பு பாராட்டினாா்.

தமிழகத்தில் மாநில அளவில் காவல்துறையின் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் மற்றும் திறம்பட பணி செய்யும் மாவட்டம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றை செயல்பாடுகள் அடிப்படையில் தோ்வு செய்து அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பண வெகுமதியும் அளிக்க காவல் துறைத் தலைவா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் அலுவலகம் தொடா்பான அனைத்து வேலைகளையும் துரிதமாகவும் சிறப்பாகவும் செய்து முடித்த தென் மண்டல காவல்துறைத் தலைவா் அலுவலகம் சிறந்த அலுவலக மேலாண்மைக்கான முதல் பரிசை வென்றது. இதையடுத்து முதல் பரிசுக்குரிய தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை காவல்துறைத்தலைவா் சி.சைலேந்திரபாபு, தென்மண்டல காவல்துறைத் தலைவா் டி.எஸ்.அன்புக்கு அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அலுவலக அமைச்சுப் பணியாளா்களிடம் தென் மண்டல காவல்துறைத்தலைவா் அன்பு வழங்கினாா். மேலும் வரும் காலங்களிலும் பணியாற்றி சிறந்த பெயரை பெறவேண்டுமென்று கூறி வாழ்த்துகள் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT