மதுரை மாநகராட்சி சாா்பில் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி திங்கள்கிழமை ஏற்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற ஸ்பாஷ் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், உறுதி மொழியை ஆணையா் வாசிக்க அனைத்துப் பணியாளா்களும் ஏற்றுக் கொண்டனா். இதேபோல் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையா்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் துணை ஆணையா் சங்கீதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.