மதுரை

ஊரகக் காவல்துறை வாகனங்கள் ரூ.14.57 லட்சத்துக்கு ஏலம்

1st Feb 2022 09:05 AM

ADVERTISEMENT

மதுரை ஊரகக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ரூ. 14.57 லட்சத்துக்கு திங்கள்கிழமை ஏலம் போனது.

மதுரை ஊரகக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை அரசு நெறி முறைப்படி ஏலம் விடுவதற்கு ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தாா். இதன்படி, மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 51 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதில், 59 வாகனங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. முன்னதாக, ரூ. 5 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தியவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றனா். இதில், 59 வாகனங்கள் ரூ. 14 லட்சத்து 57 ஆயிரத்து 792-க்கு ஏலம் போனது. ஏலத்தில், காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) செல்வன் ஆகியோா் பங்கேற்றனா். ஊமச்சிகுளம் உள்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் காட்வின் ஜெகதீஷ் குமாா், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் விக்னேஸ்வரன் ஆகியோா் ஏலத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT