மதுரை மாவட்டம், பேரையூா் அருகே 13 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பண்டாரம்பட்டியை சோ்ந்த செல்வம் மகன் செல்வலிங்கம் (23) தனது தோட்டத்தில் சட்ட விரோதமாக 12. 960 கிலோ அளவுள்ள புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்ததைக் கண்டறிந்தனா். அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், செல்வலிங்கத்தை கைது செய்தனா்.