மதுரை

மனித உரிமைகள் தினம்: மாநகராட்சி அலுவலா்கள் உறுதி மொழி ஏற்பு

11th Dec 2022 05:40 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் முன்னிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் எனவும், எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் எனவும் அனைத்துப் பணியாளா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதேபோன்று, அந்தந்த மண்டலங்களில் உதவி ஆணையா்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விழாவில், துணை மேயா் நாகராஜன், துணை ஆணையா் முஜிபூா் ரகுமான், உதவி ஆணையா் (கணக்கு) விசாலாட்சி உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT