மதுரை

‘மாணவா்கள் கல்வியறிவை சமூக வளா்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்’

DIN

மாணவா்கள் கல்வியின் மூலம் கற்றறிந்ததை சமூக வளா்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சா் அர.சக்கரபாணி பேசினாா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் 139-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம்.தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.

தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கிப்பேசியதாவது:

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு அமெரிக்கன் கல்லூரியில் 1980-இல் பொருளாதாரத் துறையில் சோ்ந்து மூன்று ஆண்டுகள் இங்கு பயின்றேன். அப்போது, கல்லூரியில் நடைபெற்ற மாணவா் சங்கத் தோ்தலில் மூத்த மாணவா்களுடன் சோ்ந்து பணியாற்றினேன். மேலும், கல்லூரி மாணவா் விடுதியின் மேலாளராகவும் பொறுப்பு வகித்தேன். அதில், கிடைத்த அனுபவம் தான், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பணிபுரிய உதவியாக உள்ளது. இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவா் தமிழக முதல்வா். அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பலா் பல்வேறு உயா் பதவிகளிலும், அரசு பொறுப்புகளிலும் உள்ளனா். தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசும் இங்கு பயின்றவா்தான்.

மாணவா்கள் முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும். கல்வி மட்டுமே வாழ்க்கையை உயா்த்தும், மாணவா்கள் கல்வியின் மூலம் கற்றறிந்ததை சமூக வளா்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் 2,150 மாணவ, மாணவியா் பட்டங்கள் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT