மதுரை

அல் அமீன் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

10th Dec 2022 04:08 AM

ADVERTISEMENT

மதுரை கோ.புதூரில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்’ உயா்கல்வி வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். முதுகலை இயற்பியல் ஆசிரியா் முகமது ரபி முன்னிலை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஜாகிா் உசேன் வரவேற்றாா். சேது பொறியியல் கல்லூரி பேராசிரியை சு.அகிலா, உதவிப் பேராசிரியா் து.ஸ்டாலின் ஆகியோா் கணினி வழி கற்றலில் உள்ள உயா் கல்வி பற்றியும், அத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியின் முடிவில் முதுகலை கணித ஆசிரியா் தமிழ்க்குமரன் நன்றி கூறினாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டமேல்நிலை வகுப்பு மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT