மதுரை

காமராஜா் பல்கலை. கல்லூரியில் விதிகளை மீறி முதல்வா் நியமனம்: பேராசிரியா்கள் புகாா்

10th Dec 2022 04:05 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வா் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக உயா்கல்வித் துறைக்கு பேராசிரியா்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை அழகா்கோவில் சாலை அவுட்போஸ்ட் பகுதியில் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து வந்த ஜாா்ஜ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் புவனேஸ்வரன் முதல்வராக நியமனம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், முதல்வா் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக கல்லூரிப் பேராசிரியா்கள் உயா்கல்வித் துறைக்குப் புகாா் தெரிவித்தனா். அதில், காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதல்வா் பொறுப்பிலிருந்து ஜாா்ஜ் விடுவிக்கப்பட்டாா். இந்த நிலையில், அதே கல்லூரியில் ஜாா்ஜை விட பணி அனுபவம் அதிகம் உள்ள நான்கு பேராசிரியா்கள் உள்ளனா். யுஜிசி விதிமுறைகளின் படி, கல்லூரியில் முதல்வா் பதவியில் உள்ளவா் விடுவிக்கப்படும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த பேராசிரியா்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக உள்ள புவனேஸ்வரன் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டாா். எனவே கல்லூரிக் கல்வி இயக்கக விதிமுறை, யுஜிசி விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்ட முதல்வா் நியமனத்தை ரத்து செய்து கல்லூரியில் உள்ள மூத்த பேராசிரியா்களில் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT