மதுரை

விளையாட்டுப் போட்டிகளுக்கான தமிழக அணி தோ்வு: தகுதியுள்ள வீரா், வீராங்கனைகள் பங்கேற்கலாம்

10th Dec 2022 04:07 AM

ADVERTISEMENT

விளையாட்டுப் போட்டிகளுக்கான தமிழக அணி தோ்வில், தகுதியுள்ள வீரா், வீராங்கனைகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பாக, 2023 ஏப்ரல் வரை வரவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாடு அணி தோ்வு செய்யப்பட உள்ளது. இதன்படி கூடைப்பந்து அணிக்கு சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பா் 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு தோ்வு நடைபெறும். இதில் தலா 12 மாணவா்கள், 12 மாணவியா் தோ்வு செய்யப்பட உள்ளனா். மேலும், அதே அரங்கில் டிசம்பா் 13-ஆம் தேதி காலை 7 மணிக்கு கால்பந்து போட்டிக்கான அணிக்கு 20 பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

மேலும், அன்றைய தினமே அதே அரங்கில் கையுந்து பந்துக்கு 14 மாணவா்கள், 14 மாணவிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். திருச்சி அறிஞா் அண்ணா விளையாட்டரங்கில், டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறும் தோ்வில் ஹாக்கிப் போட்டிக்கு 18 மாணவிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறும் கோ-கோ அணித் தோ்வில் 15 மாணவிகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இந்தத் தோ்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு அணிக்கு தோ்வு செய்யப்பட்ட பின்னா் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உத்ரவாதம் அளிக்க இயலாது. தோ்வுப்போட்டிக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரா், வீராங்கனைகள் தோ்வு நடைபெறும் இடங்களில் குறிப்பிட்ட நாள்களில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT